எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனக்குள்ளேயே என் எதிரி..!! எனக்குள்ளேயே என் எதிரி விவேகம்...


எனக்குள்ளேயே என் எதிரி..!!

எனக்குள்ளேயே

என் எதிரி

விவேகம் இல்லாத

வேகத்தில்...


சகிப்புத்தன்மை இல்லாத

திகைப்பில்...


நினைத்தது நடக்காத

மனகசப்பில்...


நடந்ததை ஏற்காத

மடமையில்...


விரக்தியில்...

வேதனையில்...

அதிகாரத்தில்...

ஆணவத்தில்...


என்னையே அந்நியனாக்கிட

எனக்குள்ளேயே என் எதிரி.


சினம்..

சிந்திக்கமறுக்கும்.


அச்சில் ஏறாத

அர்ச்சனைகளையும்

உச்ச வரம்பில்லா

நச்சு மொழிகளையும்

ஊர்வலம் அனுப்பும்.


போன பிறகுதான் தெரியும்

வந்தது மயில் அல்ல

புயல் என்று.


ஐந்து நிமிடம்

வாய்மூடி இருந்தால்

பாய் போட்டு

பந்தி விரிக்காது.


சினம் குணமல்ல

மனம் சம்பந்தபட்டது.


ஐந்து நிமிடம்

வாய்மூடி இருந்தால்

ஆவேசக் குரங்கு

வழி பார்த்துப் போகும்

பழி பாவம் இன்றி.


பதிவு : திருப்பதி
நாள் : 21-Mar-15, 4:25 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே