எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புள்ளி ராஜா ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு...

புள்ளி ராஜா

ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு
ஒரே ஒரு ஆசை

ஓயாத ஆசையால பல
கவிதை படைத்தார்
அந்த கவிதைகளைத் தளத்தில்
ஏத்திப் பாத்து மகிழ்ந்தார்

கவிதை வடித்த ராஜா
காத்துக் கிடந்தார் பல
புள்ளி வந்து சேருமுன்னு
ஏங்கிக் கிடந்தார் - நன்று
அருமை தொடர்க என
கேட்க துடித்தார் ஆனால்
ஒன்று கூட உருப்படல
வாடித் தவித்தார்......
வாடித் தவித்தார்....

கவிதை வடித்த ராஜா
ஒரு கூட்டம் சேர்த்தார்
அந்தக் கூட்டத்தைக் கவிதையால
போட்டு அடித்தார் பல
நன்று அருமை தொடர்க
கேட்டுப் பெற்றார்
அவர் உள்ள மகிழ
புள்ளிகள் பெற்றார் ...
புள்ளிகள் பெற்றார்...

ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாஆனார்
ஒரு புள்ளி ராஜா!

பதிவு : முரளி
நாள் : 27-Mar-15, 8:06 am

மேலே