நட்பு வட்டம் வைத்துக்கொள்கிறார்கள். நட்பு வட்டத்தினால் முன்னேறுகிறார்கள் என்கிறார்களே........?...
நட்பு வட்டம் வைத்துக்கொள்கிறார்கள். நட்பு வட்டத்தினால் முன்னேறுகிறார்கள் என்கிறார்களே........?
முதலில் இந்த நட்பு வட்டம் எப்படி வந்தது..? ஒருவரின் எழுத்து ஆளுமையில் மற்றொருவர் ஈர்க்கப்பட்டோ அல்லது ரசனையிலோ தானே.. !
அவரவர் திறமை, கருத்துகளின் மூலம் பழகும் குணம் ஆகியவற்றால் நட்பு வட்டம் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது. அவ்வளவுதான்.
அதை விடுத்து, ஏதோ இந்த தளத்திலிருக்கும் நட்பு வட்டம் என்பது ஏதோ தீவிரவாத குழுக்கள் போல சித்தரிக்கப்படுவது என்னால் சகிக்க முடியவில்லை.
இந்த தளத்திலிருக்கும் நண்பர்களில் குறைந்த பட்சம் 50 பேர் எனக்கு மிக நெருக்கம். எப்படி வந்தது அந்த நெருக்கம்...? அவர்கள் என்ன என் அத்தை, மாமன், சித்தப்பன், மைத்துனன் உறவுகளா... இல்லைதானே...!
வாசிப்பு.. அதில் பூத்த நட்பு..!
கலைஞருக்கு வைரமுத்து என்றால் அவ்வளவு நேசம், பிரியம்.
ஏன் .. கவிப்பேரரசு என்ன திருவாரூர் உறவா... ?
இல்லைதானே..
வைரமுத்துவின் தமிழ் எழுத்து ஆளுமை.. அதில் கலைஞருக்கு இருக்கும் ரசனை.
கலைஞரின் தமிழ் மீது வைரமுத்துவிற்கு இருக்கும் காதல்
.. இந்த காதல் ரசனையில் தானே கலைஞரையும் வைரமுத்துவையும் பிணைத்தது.
அவர்களை போலதானே .. இங்கே நாம் அனைவரும்..!
ஏதோ சிறு ஆதங்கம்.. பதிவு செய்துவிட்டேன். மனம் வருந்துவோர் வருந்தட்டும்.. பிறகு நான் சமாதானம் பேசிக்கொள்வேன்.. நட்பின் விரல் கோர்த்து...!
நன்றி.
-இரா.சந்தோஷ் குமார்.