அவர் ஒரு அன்பான சர்வாதிகாரி... "இன்னொருவனின் ஆட்டத்தை நான்...
அவர் ஒரு அன்பான சர்வாதிகாரி...
"இன்னொருவனின் ஆட்டத்தை நான் ஆட நான் இங்குவரவில்லை, எனது ஆட்டத்தை நானே ஆடுவேன், என் நாடு, என் மக்கள், இவர்களை மகிழ்வாய் வாழ வைக்கவேண்டியது எனது கடமை" என்றவர்...
"இங்கு உள்ள எவரும் தனது நாட்டை துறந்து செல்லும் நிலையை நான் உருவாக்க மாட்டேன், மாறாக அனைத்து நாட்டு இளைங்கர்களையும் இங்கே ஈர்க்கும் தொழில் வளர்ச்சியை நான் இங்கு உருவாக்குவேன்" என்றவர் அப்படியே உருவாக்கி காட்டியவர் அவர்.
அவரின் மரணம் அந்நாட்டு மக்களுக்கு மட்டும் இழப்பல்ல... அங்கே வாழும் அனைத்து நாட்டு இளைங்கர்களுக்குமான இழப்பு.
அந்த மேன்மையானவரின் மரணத்திற்காக தனது இரங்கலை இந்தியா தெரிவிப்பதோடு மட்டுமிற்றி அவரின் நினைவாக நாளை இந்திய கோடி அரைக்கம்பத்தில் பறக்கவும், இறுதி அஞ்சலி நிகழ்வில் மோடி கலந்து கொள்ளவும் இருக்கிறது.
தனது சொந்த நாட்டின் மக்கள் மீதே மதவெறியை தூண்டி, பெரும் முதலாளிகளின் பக்கம் நின்று ஏழைகளை நசுக்கி, ஆராய்ச்சி, தொழில் என அனைத்திலும் அந்நிய தேசத்தை இங்கே கொண்டுவந்து விட்டு, இங்கே இருக்கும் அறிவுசார் இளைங்கர்களை அயல்நாடுகளுக்கு அலையவிட்டு, தனது சொந்த நாட்டையே அந்நியர்களுக்கு விற்கும்...
இந்தியாவிற்கும்-மோடிக்கும் என்ன தகுதி இருக்கிறது ? மரியாதை செய்ய ! அவரின் நினைவை போற்ற !!
வீரவணக்கம் அய்யா லீஅவர்களே !,
உம்மைப்போல் ஒருவர் இந்த மண்ணில் பிறந்திருந்தால் நாங்கள் பொருள்தேடும் பறவைகளாய், பிறநாட்டில் அகதிகளாய் அலைய வேண்டிய நிலைவந்து இருக்காது...
Senthilnathan