எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"மரண பயத்தின் உச்சம் " உலகையே உலுக்கிய சிறுமியின்...

"மரண பயத்தின் உச்சம் "
உலகையே உலுக்கிய சிறுமியின் புகைப்படம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிரியாவில் கேமராவை பார்த்து துப்பாக்கி என்று பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மிய சிறுமி. உலகையே உலுக்கிய புகைப்படம் இது.

பிஞ்சு முகத்தில் பயம் ; அழுகை வெடிக்கும் நிலை கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை.

இந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான்.

சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டு பழகிய இக்குழந்தை, படம் பிடிக்க கேமராவை சரி செய்தபோது, துப்பாக்கியால் தன்னைச்சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மனிதம் மரித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிடவும் உதாரணம் வேண்டுமோ..!

ஐந்தறிவுள்ள விலங்குகள் கூட தன் இனத்தை தானே கொல்லாது. அதன் உணவைக்கூட பசித்தால் மட்டுமே கொல்லும். ஆனால் ஆறறிவுள்ள மனித இனத்துக்கு ஏன் இந்த வெறித்தனம் ? பிஞ்சு நெஞ்சில் எவ்வளவு பயம் இருந்திருந்தால் கேமராவை பார்த்து பயந்திருக்கும். தயவு செய்து திருந்துங்கள்..!

மண்ணில் மனிதம் தழைக்கட்டும்..!


படித்ததில் சிந்தித்தது

பதிவு : Enoch Nechum
நாள் : 31-Mar-15, 2:10 pm

மேலே