உலகின் தொடர்பு எல்லைக்கு அப்பால் தன் இரவு வாழக்கையை...
உலகின்
தொடர்பு எல்லைக்கு அப்பால்
தன் இரவு வாழக்கையை
தொடங்கியிருந்த விக்கிரமாதித்தன்
அவன் முன்னம் இருந்த குடுவையின்
நூற்றி என்பதாவது துளியை
ருசித்த போது
வேதாளம் வந்திறங்கியதை
இங்கிறக்கி
இதோ எழுதிக் கொண்டிருக்கிறான் .
நாளை அதற்கும்
ஒரு நூற்றி என்பது ஊற்றி
இருவரும் மட்டையாகி
என்றும் சந்தோஷம்
கொண்டிருக்கச் செய்யக்கூடும்
அவன்.