சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது காலை பாடப்படும்...
சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது காலை பாடப்படும் பாடல்கள் ரகுபதி ராகவ ராஜ ராம் ,இறைவனிடம் கையேந்துகள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்ற இரு பாடல்களாகும் ... அன்றே இந்த பாடல்கள் நெஞ்சில் தங்கிவிட்டது .. வளர்த்த பிறகு தான் தெரியும் இறைவனிடம் கை ஏந்துகள் என்னும் பாடல் முஸ்லிம் பாடல் என்று ... அதை பாடியவர் இஸ்லாமியர் நாகூர் ஹனிபா என்றும் அவர் தி முக சேர்ந்தவர் என்றும் ... அவர் முஸ்லிம் என்று தெரிவதற்கு முன்பே அந்த பாடல் என்னுள் தங்கிவிட்டது ..அன்று தான் சிந்தித்தேன் ஒருவேளை அவர் முஸ்லிம் என்று தெரிந்திருந்தால் இந்த பாடலை அறியாமலே போயிருப்பேன் ..என் பள்ளிக்கு நன்றி தெரிவித்தேன் ..இந்த பாடலை பாடவைத்தமைகாக.. மதத்தை கடந்தும் மேதைகள் நல்ல பாடல்கள் நல்ல கலை இருக்கிறது இருப்பதை அன்று தான் உணர்ந்தேன் ..
மரியாதைக்குரிய நாகூர் ஹனிபா குரல் என்றும் நிலைத்திருக்கும் .....