ககனப் பறவை நீட்டும் அலகு, கதிரோன் நிலத்தில் எறியும்...
ககனப் பறவை
நீட்டும் அலகு,
கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை,
கடலுள் வழியும்
அமிர்தத் தாரை,
கடவுள் ஊன்றும்
செங்கோல்..
(கவிஞர் பிரமிள்)