எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிகழ்தகவாவதொன்று நிரந்தரமாவதொன்று பொருள் தகவாகும் போது பொருந்தியே நிற்பதொன்று...

நிகழ்தகவாவதொன்று
நிரந்தரமாவதொன்று
பொருள் தகவாகும் போது
பொருந்தியே நிற்பதொன்று
இருள் விலகாத நாளில்
இன்மையும் இடரும் நீக்கி
அருள் தயவாக நின்று
ஆறுதல் தருவதொன்று
இகழ்தரா மானம் செல்வம்
இவற்றுடன் ஞானம் கல்வி
மகிழ்தகவாகச் சார்ந்து
மலர்ந்திடும் நட்பு என்றும்
விரல் விலகாது நின்று
வெட்டவும் வளருகின்ற
திறல் வலி நகமாய் சேர்ந்து
தீர்ந்திடாதிருத்தல் நன்று..

பதிவு : உமை
நாள் : 29-Apr-15, 7:56 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே