10-05-2015 சின்னப் பிள்ளைகள் பேசும் மொழியைச் ***சீக்கிரம் கற்றுவிடு!...
10-05-2015
சின்னப் பிள்ளைகள் பேசும் மொழியைச்
***சீக்கிரம் கற்றுவிடு!
***முகத்தில்
***சிரிப்பை ஏற்று,எழு!
கன்னம் குழிவிழச் சிரிக்கும் பூக்களைக்
***கைகளில் எடுத்து,அணை!
***அவருள்
***களிப்பைத் தொடர்ந்து,கொடு!
உன்னத வாழ்வை உழைப்பை அன்பை
***உயர்த்தக் கற்றுக்,கொடு!
***அவர்கள்
***உயர்வில் பங்கு,எடு!
முன்னுனை எடுத்துக் காட்டாய் நிறுத்தும்
***முயற்சிகள் தொடர்ந்து,எடு!
***அவர்கள்
***முன்வரக் கைகள்,கொடு!
===== ======= =======