***ஊடல்-கூடல்-தேடல்*** (ஊடலுவகை) 'ஊடலில் தோற்றவர் வென்றார்' என்றான் வள்ளுவன்......
***ஊடல்-கூடல்-தேடல்***
(ஊடலுவகை)
'ஊடலில் தோற்றவர் வென்றார்' என்றான் வள்ளுவன்...
'கூடலில் வென்றவரே தோற்றார்' என்பேன் நான்...
ஊடலில் தோற்றது யானாக இருக்கட்டும்!
கூடலில் வெல்வது நீயாக இருக்கட்டும்!
பொருள் புரிந்தவர்க்கு இரண்டிலும் வெல்பவர் யார் என்று தெரியும்!
பசித்திருந்து புசித்த நாம்-கூடலில்
புசித்த பின்னும் பசித்திருந்த வேளை அறியோம்...
வெகுஅருகில் இருக்கும்போது உரக்க ஊடல் கொண்ட நாம்,
வெகுதொலைவில் இருக்கையில்
காதல் தேடல் கொள்ள விழைவதேனோ!!!
பாலையில் யானும்
சோலையில் நீயும் இருந்தாலும் இரு உள்ளங்களும் தேடுவதென்னவோ யாம் இணையும் நாளை தான்!!!
By Subbu...