எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேடலின் பொழுதுகளை முடக்கிப் பறந்து மன்னிக்காத வேகமெடுக்கும் சுகப்படாத...

தேடலின் பொழுதுகளை
முடக்கிப் பறந்து
மன்னிக்காத வேகமெடுக்கும்
சுகப்படாத சொற்களுக்கிடையில்
கொத்தித் தின்று ஆசுவாசப்படும்
ஊமைப் பார்வைகளிலிருந்து
அணையாதிருக்க
யதார்த்தமாய்த் தவறுகளையோ
தடுமாறல்களையோ
பாரபட்சமின்றி சேமிக்கின்ற
கேமராக் கண்கள்
இனி எதையும் விட்டு
வைப்பதாயில்லை.

‪#‎சர்‬ நா

பதிவு : சர் நா
நாள் : 21-May-15, 1:29 pm

மேலே