அதுவொரு அலுவலக மதுவிருந்து .....! இலக்கை அடைந்ததற்கான கொண்டாட்டம்...
அதுவொரு
அலுவலக
மதுவிருந்து .....!
இலக்கை
அடைந்ததற்கான
கொண்டாட்டம் !
பக்கத்தில் இருப்பவன்
வரைமுறைகள் மீறிக்
கலந்து கொடுத்ததில்
தன்னிலை இழந்து
மேலதிகாரிகளை
நோக்கிக் கத்துகிறேன் .........!
சகஊழியர்கள்
அடக்கமுயன்று
தோற்கிறார்கள் ..!
திடீரென்று
கூட்டத்தில் யாரோ
கேட்கிறார்கள்
" ஊருக்குப் போனிங்களா தேவ் ? "
சட்டென்று
அழத்தொடங்குகிறேன் ......