மலைகளுக்கே தெரியாமல் அதன் தலை முடியை கோதி நெற்றியில்...
மலைகளுக்கே தெரியாமல் அதன் தலை முடியை கோதி நெற்றியில் முத்தமிட துடிக்கும் மேகங்கள்..
கதிரவனுக்கே தெரியாமல் அது செல்லும் இடமெல்லாம் ஏங்கி நோக்கும் சூரியகாந்தி மலர்கள்....
இவைகளாய் நான் மாறினேன்..உன்னை சந்தித்தபின்...உனக்கே தெரியாமல் உன்னுள் கலக்க ஏங்கி விரும்பும் நான்..
.
.
இதனால்
.
.
கனவான கவிதை உலகத்தில் வாழ்கிறேன்..உன் நினைவுகளை மருந்தாக உட்கொண்டு....
.
ஆதலால்
.
.
என் நினைவலைகள் உன்னை வருடிகொண்டே இருக்கும்... தென்றலாய்...
.
முடிவில்..
கானல் நீரில் மூழ்கி மூச்சு அடைத்த பின்பு தான் தெரிந்தது.....அது காதல் என்று...
.
.
உன்னை நினைக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் உருகுகிறேன் ஓர் மெழுகாய் !