எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் சொல்வது இங்கு பலருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தலாம்....

நான் சொல்வது இங்கு பலருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தலாம். இவ்வுலகம் இனி வரும் காலங்களில் எவ்வளவு துன்பப்டப்போகின்றது என தெரியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களின் அறிவை வளர்க்க; அழிக்க அல்ல. எனக்கு மிக சங்கடமாக இருகின்றது. மனிதர்கள் மனிதாபமானம் எனும் சொல்லின் பொருளையே மறந்து கொண்டு வருகின்றனர். இச்சமுதாயம் எங்கு நோக்கி செல்கின்றது? இக்காலத்தில் பெரியவர்களால் செய்யக்கூடிய செயல்களையேல்லாம் சிறுவர்கள் செய்துக் கொண்டு வருகின்றனர். நல்ல செயல்கள் அல்ல; தீய செயல்கள். முதலில், என் ஆதங்கத்தை தூண்டியதற்கு காரணம் "smart phone" எனும் கருவி தான். இப்பொழுதெல்லாம் வயது வித்தியாசமின்றி இக்கைபேசியை அளவில்லாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். முகநூல், வாத்சப், வைபர் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். மற்றவர்களிடம் பழக வேண்டும் என்பது ஒரு நல்ல எண்ணம் தான் ஆனால் அதையே வாழ்கை என நினைத்து தன் வாழ்கையே வீணடித்துக் கொண்டு வருகின்றனர். இக்காலத்து இளைஞர்கள் பெரும் பேரழிவை சந்திக்கப் போகிறார்கள். எந்தவொரு ஒழிவு மறைவின்றி அனைத்து விஷயங்களையும் முகநூலில் பதிவிறக்கம் செய்து சுகம் காண்கின்றனர். சொல்வதற்கே கொடுமையாக இருக்கிறது. இதன்மூலம் பலர் வருங்காலத்தில் சிக்கலில் மாட்டப் போகிறார்கள். இதில் பெற்றோர்களும் உடந்தை என்பது தான் வருத்தை அளிக்கின்றது. மகனே, நீ நன்றாக படித்து உயர்ந்த மதிப்பெண்களை பெற்றால் அப்பா உனக்கு "i -pad" வாங்கி கொடுக்கிறேன். மகனும் இரவும் பகலும் படித்து நன்கு தேர்ச்சி பெருகிறான். தந்தையும் அவனுக்கு வாக்கு கொடுத்த படியே வாங்கி கொடுக்க மகனும் உச்சிக் குளிர்கின்றான். அதன் பிறகு, தந்தை இன்னும் அவன் முயற்சி செய்து அதிக மதிப்பெண்களைப் பெருவான் என பெரிதும் நம்பிக்கை கொள்கிறார். நம்பிக்கை எரிந்து சாம்பலாக போனது. வாங்கி கொடுத்த தந்தையே மதிக்க மறுகின்றான். காரணம் ? முகநூல் வியாதி அவனை ஆட்டி படைகின்றது. கையில் கைப்பேசி இருந்தால் போதும் தன் எதிரே யார் நிற்கின்றார், என்ன பேசுகின்றார் என எதுவுமே கண்டு கொள்வதில்லை. மரியாதை, கொள்கை போன்ற பண்புகள் மனிதர்களிடயே மடிந்து பல காலங்கள் ஆகி விட்டன. இதில், பெற்றோர்களுக்கு அளவில்லா ஆனந்தம் என் குழந்தை 2 வயதிலே கைப்பேசியைப் பயன்படுத்தும் வல்லமையைப் பெற்று விட்டாள் என்று. சிறு வயதிலே கைப்பேசியைப் பயன்படுத்தும் பழக்கம் குழந்தையின் மூளையைப் பாதிக்கும்.

நாள் : 4-Jun-15, 10:01 am

மேலே