எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

# I SUPPORT NANDHINI # நண்பர் நல்லை...

# I SUPPORT NANDHINI # நண்பர் நல்லை சரவணா அவர்கள் ஒரு கவிதை (246869) சமர்பித்து அதில் கீழ் காணும் வாசகங்கள் பொறித்து ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஒரு நல்ல முயற்சிக்காக தளத்தின் படைப்பாளிகள் எல்லோரும் அவரோடு இணைவோமே :-

தோழமைகளே . தமிழ்நாட்டில் மது விற்பனையை தடை செய்யக் கோரியும் மது விலக்கினை அமல்படுத்தவும் செல்வி. நந்தினி என்னும் மாணவி போராடி வருகிறார். அவருக்கு உங்கள் படைப்புக்களால் துணை நிற்கலாமே.... மதுவின் கொடுமைகளை கருவாக வைத்து நீங்கள் எழுதும் கவிதையோ சிறுகதையோ எண்ணமோ யாரேனும் ஒருவரைத் திருத்தலாம்..!! யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எழுதுங்கள்.. படைப்பின் முடிவில் I support nandhini என்று ஹேஷ்டேக் செய்யுங்கள்...

மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் அச்சிறுமிக்கு இப்படியேனும் தோள் கொடுக்கலாமே... நன்றி..!
======================================================================================
கவிதை பதிவுசெய்து விட்டு நண்பர் சரவணா அவர்களுக்கு தனி விடுகை மூலம் லிங்க் எண்ணை கொடுத்தால் நன்று.

பதிவு : ஜி ராஜன்
நாள் : 4-Jun-15, 11:18 am

மேலே