எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி ....

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி .

கீழே தோழர் நிலா சூரியன் கருத்தை பதிக்கிறேன் .இது கதைகளின் இணைப்புகளுக்கும் உதவும் ...பயன் படுத்திக் கொள்ளவும் .நன்றி .
..................................................................................................................................................................................
மிக அருமையான தகவல்,

கண்வழியாகப் பாய்ந்தத் தேன் மனதிற்குள் இறங்கி அமுதமாய் இனிக்கிறது. அண்ணன் அபி அவர்கள், இந்த உலகம் அறியப்பட வேண்டியவர். அதற்கு இந்தப் திறனாய்வுப் பட்டியும் ஒரு வழிகாட்டளாகவே இருக்குமென்று நினைக்கின்றேன்.

அண்ணன் அபி அவர்கள் ஒரு தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியும், அவர் பல விருதுகளை வெல்லப்போகும் நாள் ரொம்ப தொலைவில் இல்லை என்பதுதான் உண்மை. அவர் விருதுகள் பெறுவதை கண்ணால் காணும் பாக்கியம் நமக்கு வாய்த்திருக்கின்றதே என்பதை நினைத்தால் எனக்கு உண்டாகும் மகிழ்ச்சி உங்களுக்கும் உண்டாகும் என்று நினைக்கின்றேன் தோழர் ராம் வசந்த் அவர்களே.

இந்த போட்டியின் மூலம்தான் அவரை நாம் வெளியே தெரியப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை, அவரது எழுத்துக்கள் அவரை இந்த உலகத் தளத்திலும், சமூக காலத்திலும் முதன்மைப்படுத்திக் காட்டி அந்த நாயகனின் ஆற்றலை ஆழுத்தமாகப் பதிவு செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் நமக்கில்லை என்பது நமக்குத்தெரியும். நான் இப்படி சொல்வதால் இந்த போட்டி வீண் என்று அர்த்தமல்ல, இந்த போட்டி அண்ணன் அபி அவர்களை, எழுத்தாளர் அபி என்று உலகத்திற்குக் காட்ட இது ஒரு முதற்கட்ட நடவடிக்கை என்றே நான் கருதுகின்றேன்.

அபி அவர்களின் படைப்புகள், யுகயுகமாய் யுகங்கள் கடந்து நிலைத்து நின்று, பல யுகங்கள் வாழ மானுட வாழ்வியல் நெறியை போதிக்கும் என்று நம்புகிறேன்.

தோழர் ராம்வசந்த் அவர்களின் தன்னலம் கருதாத இந்தப் பணி மிகுந்த பாராட்டுதலுக்குரியது, நன்றிக்குரியது.

இந்த போட்டியில் கலந்துகொள்ளும் தோழமைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தோழர்கள் சிறுகதைகளை பொறுமையாக வாசித்து பிறகு போட்டிக்கான திறனாய்வு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தாங்களின் பணி மேலும் மேலும் சிறக்கவும் செம்மையடையவும் வாழ்த்துக்கள் தோழர் ராம்வசந்த் அவர்களே. அந்த கதைகளின் இணையதள இணைப்பினை இங்கே பதிவிடும் வாய்ப்பு இருந்து இருந்தால் வாசகர்கள் வாசிப்பதற்கு வசதியாக இருந்திருக்கும். ஏனோ எழுத்துதளம் அதற்கான வாய்ப்பினை வழங்க அனுமதி மறுக்கிறது.

நன்றிகள் தோழரே.
==========================
போட்டிக்கான அபி அவர்களின் சிறுகதைகளின் எழுத்துதள இணைப்புகள் விவரம் பின் வருமாறு ...
==========================
1.புயலின் மறுபக்கம்.!
http://eluthu.com/kavithai/46722.html

2.இன்னுமொரு கண்ணி..!
http://eluthu.com/kavithai/47331.html

3.விபத்து..!
http://eluthu.com/kavithai/52990.html

4.இதுதான் விதியா..?
http://eluthu.com/kavithai/139419.html

5.குருவிக்கார குமாரு..!
http://eluthu.com/kavithai/140840.html

6.அவரது சொந்தங்கள்..!
http://eluthu.com/kavithai/150080.html

7.தல புராணம் .!
http://eluthu.com/kavithai/183058.html

8.அவள் அப்படித்தான் .!
http://eluthu.com/kavithai/201705.html

9.சுத்தம் .!
http://eluthu.com/kavithai/214039.html

10.மெய்ப்பொருள் காண்பது அறிவு.!
http://eluthu.com/kavithai/227673.html

11.எங்கேயும் எப்போதும்.!
http://eluthu.com/kavithai/227732.html

நாள் : 5-Jun-15, 6:10 pm

மேலே