எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உலகில் முதன்முறையாக மண்டையோடு மாற்று அறுவை சிகிச்சை புற்றுநோயால்...

உலகில் முதன்முறையாக

உலகில் முதன்முறையாக மண்டையோடு மாற்று அறுவை சிகிச்சை

புற்றுநோயால் மண்டையோட்டில் காயமடைந்தவருக்கு, வெற்றிகரமாக மண்டையோடு மற்றும் தலையின் மேல்தோலை தானமாகப் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அமெரிக்க மருத்துவர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

ஜேம்ஸ் பாய்ஸென் (55) என்பவர் மென்பொருள் பொறியா ளர். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டதில், இவரின் மண்டையோட்டில் காயம் ஏற்பட்டு, அது பெரிதானது.

இதைத்தொடர்ந்து அவருக்கு மண்டையோட்டை தானமாகப் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய எம்.டி. ஆண்டர்சன் புற்றுநோய் மையம் மற்றும் ஹூஸ்டன் மெதொடிஸ்ட் மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

கடந்த மே 22-ம் தேதி 15 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இதுதொடர்பாக மருத்துவர் மைக்கேல் கிளெபக் கூறும்போது, “பழுதடைந்த மண்டையொட்டு எலும்பு மற்றும் தலையின் மேல் தோல் ஆகியவற்றை உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தினோம். வெறும் திசுக்களை மட்டுமின்றி நியூட்ரியன்ட் ரத்தக் குழாய்களுடன் சேர்த்து மேல்தோலை பொருத்தியுள் ளோம். இதற்கு முன் மண்டை யோடு, தலை மேல்தோல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததில்லை” என்றார்.

இதன்மூலம் முதல் மண்டை யோடு, தலையின் மேல்தோல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நபர் என்ற பெயரை ஜேம்ஸ் பெற்றுள்ளார்.

பதிவு : ப்ரியஜோஸ்
நாள் : 6-Jun-15, 11:35 am

மேலே