எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதிரே தூங்கியபடியிருக்கும் அவருடைய சட்டைப்பையில் வெளிச்சப்பட்டு வெளிச்சப்பட்டு யாரோவின்...

எதிரே தூங்கியபடியிருக்கும்
அவருடைய சட்டைப்பையில்
வெளிச்சப்பட்டு வெளிச்சப்பட்டு
யாரோவின் அழைப்பைச் சொல்கிறது
மௌனமாக்கப்பட்ட கைப்பேசி..

வீடு திரும்பும்
சாயங்காலக் களைப்பிலுறங்குமவரை
எழுப்பமுடியாது மறுபடி மறுபடி
தன்னழைத்தலைத் தொடர்கிறது
கைப்பேசி..
எழுப்பலாமா?
எழுந்த எண்ணம்
எழுப்பாமலே ஓடிப்போனது..

நிராகரிக்கப்பட்ட வலியோடு
எங்கோ ஒருவர்
காலத்தின்மீது
வெறுப்பைத் துப்புகிறார்..

-சௌவி

பதிவு : சௌவி
நாள் : 15-Jun-15, 10:00 am

மேலே