சௌவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சௌவி |
இடம் | : உடுமலை |
பிறந்த தேதி | : 25-Nov-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 1 |
துயரம் வழியும்
அந்தத் தெருவின் வழியாக
நடந்து கொண்டிருக்கிறேன்..
மெல்ல விசும்பிக்கொண்டே
மோர் விற்றுக்கொண்டு போகும்
யுவதியின் பின்னால்
எலும்பும் தோலுமெனச் செல்லும்
நாயின் கண்களிலிருந்து வழியும்
சோகம்
அத்தெருவில் நடப்போரின்
கால்களையெல்லாம் கவ்விப்பிடித்திழுக்கிறது..
திறக்கப்படாத வீட்டிற்குள்
பசி மிகுதியில்
பாத்திரங்களை உருட்டுவிட்டு
ஏதும் கிடைக்காத விரக்தியில்
வெளியேறுகின்றன எலிகள்..
வாடிக்கையாளர்கள் கிடைக்காது
அழும் வேசிகளின் வேதனைதாளாது
தன் குறியறுத்தெறிகிறான்
காமன்..
உணவொன்று கிடைத்த சந்தோஷத்தில்
ஓடிவந்த வெள்ளைப்பூனை
அதைத் தூக்கிச்செல்லும் முயற்சியில்
அதன் கனம் த
எதிரே தூங்கியபடியிருக்கும்
அவருடைய சட்டைப்பையில்
வெளிச்சப்பட்டு வெளிச்சப்பட்டு
யாரோவின் அழைப்பைச் சொல்கிறது
மௌனமாக்கப்பட்ட கைப்பேசி..
வீடு திரும்பும்
சாயங்காலக் களைப்பிலுறங்குமவரை
எழுப்பமுடியாது மறுபடி மறுபடி
தன்னழைத்தலைத் தொடர்கிறது
கைப்பேசி..
எழுப்பலாமா?
எழுந்த எண்ணம்
எழுப்பாமலே ஓடிப்போனது..
நிராகரிக்கப்பட்ட வலியோடு
எங்கோ ஒருவர்
காலத்தின்மீது
வெறுப்பைத் துப்புகிறார்..
-சௌவி
எதிரே தூங்கியபடியிருக்கும்
அவருடைய சட்டைப்பையில்
வெளிச்சப்பட்டு வெளிச்சப்பட்டு
யாரோவின் அழைப்பைச் சொல்கிறது
மௌனமாக்கப்பட்ட கைப்பேசி..
வீடு திரும்பும்
சாயங்காலக் களைப்பிலுறங்குமவரை
எழுப்பமுடியாது மறுபடி மறுபடி
தன்னழைத்தலைத் தொடர்கிறது
கைப்பேசி..
எழுப்பலாமா?
எழுந்த எண்ணம்
எழுப்பாமலே ஓடிப்போனது..
நிராகரிக்கப்பட்ட வலியோடு
எங்கோ ஒருவர்
காலத்தின்மீது
வெறுப்பைத் துப்புகிறார்..
-சௌவி