எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனைகள் .. - மெது வடை எண்ணெய் குடிக்காமல்...

சிந்தனைகள் ..

- மெது வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க வடையின் வாயை இருக்க கட்டிவிடவும் .

- மைசூர்பாகு கெட்டியாகிவிட்டால் உடைந்த நாற்காலிகளுக்கு முட்டு கொடுங்கள்.

- பஞ்சு போல சப்பாத்தி வர கோதுமையுடன் பருத்தி கொட்டையை போட்டு மைய அரைக்கவும் .

- சமையல் நல்ல மணமாக இருக்க நல்ல சென்ட் வாங்கி அடிக்கவும் .

- மோர் குழம்பு நீர்த்து விட்டால் நீர் மோராக கொடுக்கவும் .

- சமையல் அறை மேடையில் படிந்த எண்ணெய் பசையை போக்க மேடையின் மீது நெருப்பு பற்ற வைக்கவும் .எண்ணெய் எரிந்து ஆவியாகிவிடும் .

பின் குறிப்பு : " தயவு செய்து இவைகளை கடைபிடிக்காதீர்கள் "

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 8-Feb-14, 7:24 pm

மேலே