எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எங்கேனும் ஒரு இடத்தில் உங்களின் ஏதேச்சையான முதல் பார்வை...

எங்கேனும் ஒரு இடத்தில்
உங்களின் ஏதேச்சையான
முதல் பார்வை தவிர்த்து...
இரண்டாம் பார்வைக்கு
எவன் ஒருவன்
சிறு புன்னகையில்
நேசம் சொல்கிறானோ
அவன் நானென்றே கொள்க..

அது தவிர்த்து,
வேறோர் பயணமாய்
நெருஞ்சி முள் சேர்க்க...
சக மனித நட்பின்
வேறொரு சாத்தியங்களோடு...!

நாள் : 3-Jul-15, 11:14 am

மேலே