எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விண்ணிற்கு இரவு அழகு ...! இரவிற்கு ஒளி அழகு...

விண்ணிற்கு
இரவு அழகு ...!

இரவிற்கு
ஒளி அழகு ...!

ஒளியிற்கு
விளக்கு அழகு !

விளக்கிற்கு
ஒளியளிக்கு பெண்ணின் கைகள் அழகு ...!

பெண்ணின் கைகளுக்கு
வளையல் அழகு ...!

வளையலுக்கு
வாலைப மனதை வளைக்கு கண் அழகு ...!

கண்ணிற்கு
கருமைநிற மை அழகு ...!

மையிற்கு
கருங் கூந்தல் அழகு ...!

கருங் கூந்தலுக்கு
படரும் பூக்கள் அழகு ...!

பூக்களுக்கு
மௌன புன்னகை அழகு ...!

புன்னகைக்கு
மெல்லிசை அழகு

மெல்லிசைக்கு
கொலுசின் அசைவு அழகு !

கொலுசின் அசைவுக்கு
என் தமிழச்சியின் கால்கள் அழகு ...!

என் தமிழச்சியின் கால்களால்தான்
என் தமிழ் மண்ணிற்கே அழகு ...!


உதயா ..

பதிவு : உதயகுமார்
நாள் : 4-Jul-15, 7:48 pm

மேலே