உன் பார்வை மின்னலால் என் அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்...
உன் பார்வை மின்னலால்
என் அடிவயிற்றில்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள்
சிறகடித்தன
அது முதல்
உன்னைச்சுற்றியே
என் உலகம்
ஆனால் என் உலகத்தில்
உள் நுழைந்துவிடாத
இயல்பான கவனத்தில் நீ
உன் வீட்டு விளக்கை
நீ அணைத்தாலும்
என் வீட்டிலும் இருளாவதுஎப்படி>
உன்னை விரும்பத்தொடங்கியபோதே
உன்னை வெறுக்கவும்வேண்டி வரும்
என்று உணராததால்
வீணான வருத்தங்களுக்கு
ஆளாகி நிற்பதோடு
வாழ்க்கையையும்
தொலைத்து நிற்கிறேன்