தீர்ந்து போகும் உன் மீது இருக்கும் ஆசை ஏனோ...
தீர்ந்து போகும்
உன் மீது இருக்கும் ஆசை
ஏனோ தீர மறுக்கிறது எனக்கு....!!!!
நான் புகைத்த சில நிமிடங்களில்
இறந்து போனாய் நீ ...!!!
உன்னை சுவாசித்த நானோ
கனம் கனம் இறந்து கொண்டிருக்கிறேன்...!!!
புற்றுநோய் முற்றி போனதாம்
மருத்துவர் சொன்னார்...!!!!!!!!!!!!!
அறிவுரை சொல்லும் போது சிரித்த இதழ்கள்
இன்று ஆராய்ந்து சொன்ன போது அழுகிறது
புகைத்தலின் உச்சம் தான் இறத்தலோ????
முதன் முறை மீண்டும் சுவாசிக்க
எத்தனித்தும் இயலாத நிலை...!!!!
மெல்ல உயிர் குடிக்கிறது
புகையிலை (சிகரெட்) தந்த உறவொன்று உள்ளுக்குள்
புற்றுநோய் (கேன்சர்) என்ற பெயரில்...!!!!!!!!!