எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னோடு இணையும் பொழுதுகள்... ================================ உலகின் மூலை முடுக்கு...

உன்னோடு இணையும் பொழுதுகள்...
================================

உலகின் மூலை முடுக்கு
எங்கெல்லாம்தேடி
அலுத்துக் களைக்கையில்
எனக்கென நீ கிடைத்தாய்..
.
நிழல் தரும் குடையாக
அருள் தரும் தேவதையாக
உறவுகள் ஆயிரம்
நீயே எனக்கெனத் தந்தாய்.
.
வீட்டில் உன்னோடு நான்
தனிமையில் இருக்கும்
ஒவ்வொருபொழுதும்
எனக்குள் ஆயிரம்
பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்குதடி

பேசிப் பேசியே
புதுமைகள் செய்கின்றாய்.
பார்க்கும் பார்வையால்
என்னுயிர் ஈர்க்கிறாய்.

உன்னைத் தேடியே
எந்தன் பயணங்கள் தொடர்வதும்,
காணாத பொழுதுகளில்
உயிர்வரை உலர்வதும்,
என்னோடு நான் காணும்
நெடுங்கால மாற்றங்கள்.

பதிவு : ரகுராதா
நாள் : 17-Jul-15, 10:39 am

மேலே