காலை வணக்கம் .. வெண்டுறை ... அம்மா அப்பா...
காலை வணக்கம் ..
வெண்டுறை ...
அம்மா அப்பா நடுவில் பிள்ளை
படுத்து உறங்கும் இரவு வேளை
அப்பா போட்ட கொறட்டை ஒலியில்
உறங்கிய பிள்ளை விழிகள் திறந்து
எழுந்தமர்ந்தான் கட்டில் மீது
இருளும் பாதி ஒளியும் பாதி
இருக்கும் அறையில் வந்த சத்தம்
எங்கிருந் தென்று தெரியாப் பிள்ளை
திருதிரு வென்று முழித்திருக்க வந்தது
அடுத்த கொறட்டை சத்தம்
சலனம் இன்றி அம்மா உறங்க
திறந்த அப்பா வாயில் இருந்தது
வந்தது சத்தம் என்றே கண்டு
சின்னஞ் சிறிய விரல்கள் இரண்டை
மூக்கில் நுழைத்தான் பிள்ளை