நல்லோர்கள் கவர்சிகரமாக இருக்கமாட்டார்கள். அவர்கள் யாரையும் வசியப்படுத்தவும் விரும்பமாட்டார்கள்.அவர்கள்...
நல்லோர்கள் கவர்சிகரமாக
இருக்கமாட்டார்கள்.
அவர்கள் யாரையும்
வசியப்படுத்தவும்
விரும்பமாட்டார்கள்.அவர்கள்
அவர்களாகவே இருப்பார்கள்.
~திரு.வெ.இறையன்பு I.A.S
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உண்மையோ எப்போதும் எளிமையாக
இருக்கிறது.அதில் பளபளப்போ மினுமினுப்போ
இருப்பதில்லை .அதன் அருகில் சென்றால் தான்
அதன் கம்பீரமான அழகும்,மனதை
வசீகரிக்கும் நறுமணமும் நம்மையே
ஒளிர்விக்கும்.அதன் ஜுவாலையும் நமக்குப்
பிடிபடும்.ஆனால் அதற்கு
பொறுமை தேவை.
~வெ.இறையன்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உலகம் அபிப்பிராயங்களை வைத்து தான்
யாரைப் பற்றியும் முடிவு செய்கிறது.
அபிப்பிராயம் என்கிற முகமூடியை கச்சிதமாக
அணிந்து கொள்பவர்கள் அசிங்கமான
முகத்தை அடுத்தவர்களுக்குக் காட்டாமலேயே
அழகர்களாக ஆகிவிடுகிறார்கள்.
முகங்களை நம்புவதை விட முகமூடிகளை
நம்புவதற்கு உலகம் தயாராக இருக்கிறது.
நமக்கு தேவை பரபரப்பு தான்,உண்மையல்ல.
~வெ.இறையன்பு