எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆளுங்கட்சி வெட்கப்படவேண்டும் ------------------------------------------------- அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசுச்...

ஆளுங்கட்சி வெட்கப்படவேண்டும்
-------------------------------------------------
அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசுச் செலவில் அண்ணா நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது கட்டப்பட்டது. ஆசியாவிலே மிகச்சிறந்த நூலகமாகத் திகழும் இதை சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அண்ணாவின் பெயரில் எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி தான் அஇஅதிமுக. அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துபவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அது ஆரம்பிக்கப்பட்ட நாளில் பராமரித்ததைப் போல இப்போது பராமரிக்காமல் இருக்க என்ன காரணம்? அந்த அருமையான் நூலகம் தி.மு.க-வின் பணத்தில் இருந்தோ முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்களின் குடும்பப் பணத்தில் இருந்தோ கட்டப்பட்டது அல்ல. அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துபவர்கள் அண்ணாவுக்கும் தமிழர்களுக்கும் செய்யும் பெரும் துரோகம் இந்த நூலகத்தைப் புறக்கணிப்பது. அதே போல செம்மொழிப் பூங்காவும் அரசுப் பணத்தில் கட்டப்பட்டது. அதுவும் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆளுங்கட்சி அண்ணாவுக்கும் தமிழுக்கும் எதிரான கட்சியா என்ற ஐயம் தமிழர்களுக்கு வருவது இயல்பே. அரசுப் பணத்தில் கட்டப்பட்ட நூலகத்தையும் செம்மொழிப் பூங்காவையும் பராமரிக்கும் பொறுப்பு யாருடையது? அரசை இப்போது வழி நடத்தும் ஆளுங்கட்சிக்கா அல்லது அதைக் கட்டியபோது ஆட்சியில் இருந்த கட்சிக்கா? இதற்காக யார் வெட்கப்படவேண்டும்?

பதிவு : மலர்91
நாள் : 27-Jul-15, 1:52 pm

மேலே