இல்லாத ஊருக்கு இலுப்பம் பூ தான் சர்க்கரை -------------------------------------------------------------------...
இல்லாத ஊருக்கு இலுப்பம் பூ தான் சர்க்கரை
-------------------------------------------------------------------
தேர்தல் நேரங்களில் மனிதர்களாகிய நாம் ,இந்த 5 வருடத்தில் நாம் பட்ட துன்பங்களை எல்லாம் எண்ணிப் பார்த்து,அதற்கு அவர்கள் வந்தாலே பரவாயில்லையே... என்று
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இதையே தான் எண்ணுகிறோம்.ஆட்சியாளர்களும் நிர்வகிக்கும் கட்சிகளும் மட்டுமே மாறுகின்றன தவிர,நம் வாழ்க்கையிலும் சமுதாயத்திலும் எந்த வித முன்னேற்றமும் இல்லை.
தயவு செய்து யாரும் இலவசங்களை பார்த்து ஏமாறாதீர்கள்.
அத்தனையும் நம் பணத்தில் இருந்து தான் தரப்படுகின்றன.
ஏதோ அவன் அப்பன் வீட்டு சொத்தை தருவது போல்
அறிக்கை விடுகின்றான்(ள்).
இவை அனைத்தும் தனிநபர் கடன் சுமையில்,நம் தலையின் மீது ஏறிக்கொண்டே (ஏற்றிக்கொண்டே) இருக்கின்றன(ர்).
நம் பணத்தில் சொகுசு மகிழுந்திலும் விமானத்திலும்
பறக்கும் அவர்களுக்கு,வெளியே மக்கள் படும் வேதனை
எப்படி தெரியும்.
அதிகாரத்தில் இருப்பதினாலேயே அவன்(ள்) கடவுள்
என்று எண்ண வேண்டாம்,
அது நாம் அவர்களுக்கு கொடுத்துள்ள பணி,
எனவே நாம் தான் அவர்களுக்கு முதல்வர்கள்.
நன்றாக அறிந்துகொள்ளும் முதல்வன்(ர்) என்பவன் நம் சேவகன்(ர்).
குறிப்பு
----------
எல்லா முதல்வர்களையும் குறை சொல்ல வில்லை.
காமராச(ஜ)ரும் முதல்வர் தான்.
காமராசரின் பெயரை விற்று அரசியல் செய்யாதீர்,
முடிந்தால் அவரைப் போல் வாழ்ந்து காட்டுங்கள்.
சிலப்பதிகாரத்தில் அரசியல்
------------------------------------------
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்( அரசியலில் தவறு செய்தால் தர்மமே எமனாகும்).
நீங்கள் செய்வது அரசியலா? இல்லை வியாபாரமா ?