எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விண்ணை தொட்ட விண்கலமே..... தமிழால் உயர்ந்து ! தமிழானாய்...

விண்ணை தொட்ட விண்கலமே.....
தமிழால் உயர்ந்து !
தமிழானாய் உயர்ந்து !
தலைநிமிர்ந்த தவபுதல்வனே !
எங்கள் இந்தியதலைமகனே ! .
முன்னால் ஜனாதிபதியே !
என்னாலூம்
அக்னி சிறகை விறித்து
எங்கள் இதயம் தொட்ட இமயவனே !

படகோட்டி மகனும்.
முயன்றால், தன் முயற்ச்சியால்
பார் ஆளமுடியும் என்று படைத்துகாட்டியாவனே !
முதல் மகனே ! எங்கள் தலைமகனே !
அனையா விளக்கே !
இளைஞர்களின் வாழ்க்கையில் என்றும் நீ ஓரு கலங்கரை விளக்கே !

காலம் சென்றாலூம் ! கலாம், கலாம்
என்று எங்கள் காலம் உள்ளவரை,
ஏன்? எந்த காலம் உள்ளவரை
உன் பெயர் சொல்லூம்
எங்கள் இதயம் என்னும் இல்லத்தின்
நம்பிக்கை நாயகனே !
எங்கள் நாட்டின் முதல்மகனே !
குழந்தைகளின் குதுகலமே !
இளைஞ்ர்களின் ஏவுகனையே !

ஜாதி மதம் மொழி கடந்து
இந்தியாவை ஏங்க வைத்த
ஏவுகனை நாயகரே !
கருணை கடலே !
அணு முதல் அண்டம்வரை !
ஏன், ஆண்டவன்வரை அறிந்தவரே !
அறிவியாலில் சிறந்தவரே !
முழுமுதல் தெரிந்தவரே !
முற்றும் கற்ற முழுமணியே !.

விண்ணை தொட்ட விண்கலமே !.....
தமிழால் உயர்ந்து !
தமிழானய் உயர்ந்து திருக்குறளே !
தலைநிமிர்ந்த தவபுதல்வனே !
எங்கள் இந்தியதலைமகனே !.....
நீ மறைந்தாலூம் !
நின் புகழ் !!! வான் புகழ் !!!...

பதிவு : விவேக்ஸ்
நாள் : 29-Jul-15, 12:27 am

மேலே