தினமும் உன்னைக் காணக் காத்திருக்கும் என் கண்களுக்குத் தெரியாது..!...
தினமும் உன்னைக்
காணக் காத்திருக்கும்
என் கண்களுக்குத்
தெரியாது..!
நீ
என் வாழ்வில்
கானல் நீராய்
வந்து சென்ற
காதல் என்று..!
இருந்தாலும்
அதைக் கண்ணீர்
சிந்தாமல் பார்த்து
கொள்கிறேன்..!
உன் நினைவுகளை
என் மனதில்
இருந்து
அழித்துவிட்டு..!
எனக்கு
உன் காதலின்
மாயங்களை
விட..!
என் கண்களில்
இருந்து வரும்
கண்ணீரின்
மகத்துவம்
தெரிந்ததால்,,!
bY
மா.லக்ஷ்மணன்(மதுரை)