எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம், அறிமுகமான குழந்தை நட்சத்திரம்...

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம், அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கீர்த்தனா, தற்போது இயக்குநர் மணிரத்தினத்தின் உதவி இயக்குநராக இணைந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கீர்த்தனா. நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்திலேயே, தனது அசாத்திய நடிப்பின் காரணமாக, தேசிய விருது வென்றார் கீர்த்தனா. பின் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்கமே தனது லட்சியம் என்று கூறி, நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

இதனிடையே படிப்பை நிறைவு செய்துள்ள கீர்த்தனா, இயக்குநர் மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்தின் உதவி இயக்குநராக தற்போது இணைந்துள்ளார்.

அந்த படத்தில், கார்த்தி மற்றும் துல்கர் சல்மான் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், துணை நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த துணை நடிகர்கள் தேர்வு குறித்த பணிகளை, கீர்த்தனா மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்தி்ல், ஹீரோயினாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதில், கீர்த்தி சுரேஷின் பெயர் முன்னணியில் உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் மாதம் துவங்க உள்ளது.

நாள் : 1-Aug-15, 9:47 am

மேலே