முல்லைபூ விற்பவனை மன்னிக்கவே மாட்டேன் உன் பல்வரிசை அழகை...
முல்லைபூ விற்பவனை
மன்னிக்கவே மாட்டேன்
உன் பல்வரிசை அழகை
பகிரங்க ஏலம் விடுகிறானே.
செம்பருத்தி பூவிடம்
கேட்டுப் பார்த்தேன்
நீ கொடுத்த முத்தத்தில்
சிவந்து போனதாம்.
உனக்கு சரண்யா என்று
பெயர் வைத்தது தப்பாப் போச்சி .
வண்ணத்துப் பூச்சிகள்
சரணாலயம் என்றெண்ணி
எப்போதும் உன்னை
வட்டமிடுகின்றன .
சுசீந்திரன்.