காந்தியடிகள் நம்மிடையே இருந்தால் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துவது...
காந்தியடிகள் நம்மிடையே இருந்தால் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துவது குறித்தும் அதற்கு ஒரு விற்பனை இலக்கை நிர்ணயித்து செயல்படுத்துவது குறித்தும் ஒன்றும் சொல்ல மாட்டாரா? வணிக வளாகங்களில் மது விற்பதான அரசின் கொள்கை முடிவு(?)க்கு பாராட்டியிருப்பாரா? டாஸ்மார்க்கை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய நிர்ப்பந்தப்படுவதும் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆளுக்கொரு மதுபான தொழிற்சாலை வைத்துக் கொண்டு லாபத்தில் கழுதை போல புரள்வதும் அவர் வழிதானா? படிப்படியான போராட்டத்தில் ஒரு அறுபது வயதுப் பெரியவர் செல் ஃபோன் டவரில் ஏறி உயிரை விட்டதற்கு மாத்திரம் கட்ட்ட்டுமையான கண்டனத்தை தெரிவிப்பாராமே????
அருணை ஜெயசீலி.