எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதையை எங்கு பதித்தால் 400...500 பார்வையாளர்கள் கிடைப்பார்கள் .....நீண்ட...

கவிதையை எங்கு பதித்தால் 400...500 பார்வையாளர்கள் கிடைப்பார்கள் .....நீண்ட நாளாக ஒரு சந்தேகம்........இன்று கவிதைகள் போய் பார்த்ததில் மூன்றே நாளில் பார்வைகள் தூள்......சரி கவிதை எப்படி என்று பார்த்தேன்...... போங்க சார் எதுக்கு வம்பு.......நமக்கு கவிதை என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கலாம்.....அந்த ரசனை கொஞ்சம் கூட இல்லாதவனாக கூட இருக்கலாம்.......வாய கொடுத்துகிட்டு எதுக்கு வம்பை விலைக்கு வாங்க வேண்டும்...இதில் ஏதோ -அலிபாபாவும் 40 திருடர்களும்- சினிமாவில் அபு கா கசம் - அந்தாக் கா சிசம் திறந்திடு சீசே ...என்று சொல்வது போல் ஏதோ ஒரு தந்திரம் இருக்கிறது.....தயவு செய்து யாரேனும் சொல்லுங்களேன் .......ஏனென்றால் மிகச்சிறந்த பல படைப்பாளிகளின் சீர்மிகு கவிதைகள் கொஞ்சம் பார்வையாளர்களால் மட்டும் நிரப்பப் பட்டுள்ளது........கவிதையோ நன்றாக இருக்கிறது .ஏதோ ஒன்று இருக்கிறது...... அது என்ன வென்றுதான் தெரியவில்லை.....கடல் மணல்களையும் எண்ணி விடலாம்...இந்த கம்ப சூத்திரத்தை யாரறிவார் ......

நாள் : 6-Aug-15, 8:46 pm

மேலே