பவளமால் வரையி னிலவெறிப் பதுபோற் பரந்தநீற் றழகுபச் சுடம்பிற்...
பவளமால் வரையி னிலவெறிப் பதுபோற் பரந்தநீற் றழகுபச் சுடம்பிற்
றிவளமா துடனின் றாடிய பரமன் சிறுவனைப் பாரதப் பெரும்போர்
தவளமா மருப்பொன் றொடித்தொரு கரத்திற் றரித்துயர் கிரிப்புறத் தெழுதுங்
கவளமா களிற்றின் றிருமுகம் படைத்த கடவுளை நினைந்துகை தொழுவாம்