எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மதுவிலக்கு பூரண மதுவிலக்கு நமக்கு தேவையா..இன்றைய நவீன உலகில்...

மதுவிலக்கு
பூரண மதுவிலக்கு நமக்கு தேவையா..இன்றைய நவீன உலகில் அது சாத்தியமா..
எனக்கு “நான் ஈ படம்” தான் ஞாபகத்திற்கு வருகிறது ஒரு “ஈ”யை வைத்து படம் பண்ண முடியுமா.. சாத்தியமாயிற்று ..வெற்றி பெற்றது
ஒரு மதுவை வைத்து அரசியல் பண்ண முடியுமா..? முடியும் என் நாட்டில்..வெற்றி யாருக்கு...
மதுவுக்கா ..மக்களுக்கா...அரசியல்வாதிகளுக்கா..
முடிவு குடிமகனின் கையில்..
10 வருடங்களுக்கு முன்னால் மது பொது வாழ்க்கையின் மைய நீரோட்டங்களில் இல்லை ஆனால் இன்றோ அரசியலின் மைய புள்ளிகளிலும், ஆட்சியை தீர்மானிப்பதிலும் ஒரு “நான் ஈ”யாக வந்துவிட்டது. நம் பிரச்சனை என்ன மது விலக்கா.. மது அடிமையா..இன்று பல நிகழ்ச்சிகளில் மது நம்மை பகிர்ந்து கொள்கிறது பொது விழாக்கள்.கல்யாணம்,காதுகுத்துனு இன்னும் எத்தனையோ..ஆனால் இந்த மது இன்றல்ல இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் நம்மோடு இருக்கிறது.மதுவின் பரிணாமங்கள் மாறியிருக்கிறது ஆனால் அதன் மேலுள்ள பரிதவிப்பு மாறவில்லை இருநூறு வருடங்களாக இவ்வளவு சீரழியாத என் சமூகம் கடந்த இருபது வருடங்களில் சீரழிகிறது என்றால் அதற்கு காரணம் மதுவல்ல
மதிகெட்ட மனிதனே...மது அடிமை மனிதனே..
“Party-க்காக மது” என்ற நிலை மாறி
“மதுவுக்காக Party” என்ற திசையை நோக்கி
நம் நகர்தல் பயணித்து கொண்டு இருக்கிறது.அந்த பயணத்தை திசை திருப்ப வேண்டுமே தவிர மதுவே வேண்டாம் என்று கூறுவது மடத்தனம்
மது குடிப்போரை வயதின் அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கலாம் 1.X<20, 2.20-45, 3.Y>45இதில் 20-45 வயதினரேஅதிக எண்ணிக்கையில் குடிப்பவராவர் இதையும் மூன்று வகையாக பிரிக்கலாம்
1.BEGINNER
a.INTROVERT b. EXTROVERT
2.EXPERT
a.INTROVERT b. EXTROVERT
3.PROFESSION

1.BEGINNER:
இவங்க மகிழ்ச்சியின் உச்சத்திற்கு மது ஒரு சிறுபகுதியே..இவன் மது அடிமை ஆகாமல் இருக்க என்ன வழி..?
ஊருக்கு ஊரு sports center வைத்து நிறைய games ஆரம்பிக்கலாம், ஆயகலைகள் அறுபத்தி நான்காம் இதில் எத்தனை பேருக்கு ஒரு கலையாவது தெரியும் அதில் ஏதாவது ஒன்றை எடுத்து வளர்ச்சி அடைய செய்யலாம்..நிறைய cultural celebrations- ஐ ஊக்கப்படுத்தலாம்.
2.EXPERT:
இவங்க தான் மது அடிமைகள்..அவனுக்கு மகிழ்ச்சியின் உச்சம், எச்சம், மிச்சம் எல்லாமே மது தான்..இவனை சேவை செய்வதில் ஊக்கப்படுத்தயும், குடியின் தன்மையை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றிவிடலாம்..
3.PROFESSION :
“”தாமரை இலை பீர் போலே ஒட்டி ஒட்டாமல் இரு””
மது இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் ஒரே நிலையில் இருக்க வேண்டும் இந்த பயணமே சமூக வளர்ச்சிக்கான வழி.. மேலே சொன்ன வழிவகையை கடைப்பிடித்தாலே.. அவன் இந்த நிலைக்கு வந்துருவான்..
இந்த மாதிரி வழிவகையை யோசிக்காம எப்படி மதுவிலக்கு முடியும்..
மதுவிலக்கே தேவையில்லை..
பூரண மதுவிலக்கு என்பது வெட்டிப்பேச்சு...!!
அத்தனையும் அர்த்தமற்ற அரசியல் சாயப்பூச்சு...!!

நாள் : 14-Aug-15, 12:06 pm

மேலே