என்னை வெட்டித் தின்றவனே என்னுயிருக்குள் ஒட்டிச் சென்றவனே என்...
என்னை வெட்டித் தின்றவனே
என்னுயிருக்குள் ஒட்டிச் சென்றவனே
என் கனிம வளங்கள் கொஞ்சம் கொஞ்சமா
கடத்தி ரசிப்பவனே
உன்பார்வை பன்னீரில்
என் பருவக் கரைசல் கரைந்து போகுதடா
பகலவன் படாத இடத்தாடை முழுதும்
பல நாடுகள் வரைபடம் தெரியுதடா
செவ்வாயில் ஆளில்லா ராக்கெட்
செய்வதென்ன அதிசயம் போடா
உன் சேவை புன்னகை
செய்யும் சித்துவேலைகள்
அதற்கு அது ஈடா
பகலா இரவா
தெரியா ஏக்கம் எனக்கடா
உன்னை பகுத்துப் போட்டு
பார்க்காமல் தூக்கம் ஏதடா
ஊரடங்கு உத்தரவு உனக்கு மட்டும்
விலக்கிக் கொள்ளடா
ஊரடங்கும் நேரத்திலே என்வீடு வந்து
கதவைத் தட்டடா...
என்னை வெட்டித் தின்றவனே
என்னுயிருக்குள் ஒட்டிச் சென்றவனே
என் கனிம வளங்கள் கொஞ்சம் கொஞ்சமா
கடத்தி ரசிப்பவனே.
சுசீந்திரன்.