வானம் தான் எல்லை என்றுக் கூறாதே விண்ணைத்தாண்டியும் சென்று...
வானம் தான் எல்லை என்றுக்
கூறாதே விண்ணைத்தாண்டியும்
சென்று விடு
கனவுகளில் பறக்காதே பிறர்
உணர்வுகளுக்கு மதிப்பு கொடு
தோல்வியைக் கண்டு துவழாதே
வெற்றியைக் கண்டு நெகிழாதே
உன் உள்ளத்தை பேசவிடு
அதுவே உண்மை கூறும்
நிலவினைப் போல் வளர்ந்து
தேய்ந்திடாதே
சூரியனைப் போல் நிலைத்து நில்
உன்னை வானமாக எண்ணிக் கொள்
மின்னும் நட்சத்திரங்கள்
தோல்விகளல்ல வெற்றிகள்
அது நீ ரசிப்பதர்க்காகல்ல
உன்னை மெருகேற்றுவதற்கு
உன் வியர்வைகளை மழையாய்
பொழிந்திடு கேட்கும் இடி ஓசை
வெற்றிக்கு கிடைத்த கைத்தட்டல்கள் ...