எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் ஆர்வலர்களுக்கு வணக்கம்... அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்.....

தமிழ் ஆர்வலர்களுக்கு வணக்கம்...
அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்..
சொல்வளம் மிக்க நம் செந்தமிழில்
சொந்தமில்லா பல காரணிகளுக்கு, காரணங்களுக்கு, கருவிகளுக்கு, கலாச்சாரங்களுக்கு நம் மொழியில் சொற்கள் இல்லையே தவிர வளம் இல்லமல் இல்லை.
இன்றைய காலங்களில் நாம் பல்வேறு கலாச்சாரங்களையும்,காலனிலைகளையும்,கல்வி நிலைகளையும் கடந்து செல்ல வேன்டிய நிர்பந்தம்..
எனவே கலைச்சொற்களை உருவாக்க வேண்டி சூழல் இது...
நம்மிலே பலர் " என்னடா தமிழ்.. தமிழ்னு சொல்றிங்க.. சிம் கார்டுக்கு தமிழ்ல என்ன? டயர்க்கு தமிழ்ல என்ன?" என நகையடுவதை
காணவேண்டிய நிலை...
பல கண்டுபிடிப்புகள் தமிழர் அல்லாதோருடையதாதலின் நம்மிடம் சொற்கள் இல்லை...

தற்போதைய சூழலில், திரைகவிஞர்களும், தமிழ் அறிஞர்களும் நவீன சொற்களை புகுத்தி வருகின்றனர்.
நாமும் இப்பணியில் கரம் கோர்க்க வேண்டும்..
புது கலைசொற்களின் தொகுப்பை உருவாக்க முனைய வேண்டும்...

இதன் முதல் முயற்சியாக தமிழில் வார்த்தை இல்லை என நீங்கள் கருதும் சொற்களையும், அவற்றிற்கு உமது தமிழாக்கங்களையும் " leonard478@gmail.com" மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்..
பிறகு அவ்வாறு பெறப்பட்ட வார்த்தைகளின் தொகுப்புகளை வாரம் ஒருமுறை பதிவிடுகிறேன்.அதற்கு தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குங்கள்..

உங்கள் ஆதரவை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்..
முடிந்தவரை இந்த பதிவை பகிரவும்.

மேலும் எனது தமிழாக்கங்கள் சிலவற்றை பதிகிறேன்.கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது..

raksha bandhan -காப்பு முடி நன்னாள்
phylogenitic - பரிணாம மேம்பாட்டியல்
selfie - சுயநிழலி
fresher's day - புதுமுகர் நாள்

நாள் : 29-Aug-15, 10:16 pm

மேலே