எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மதுவிலக்கு மது - விலக்கு....!!! தமிழா நீ.....!!! 👉...

மதுவிலக்கு மது - விலக்கு....!!!

தமிழா நீ.....!!! 👉
விழிப்பதற்கே உறக்கம்
மது குடித்துத் குடித்து உறங்கியே கிடக்கிறாயே..?

வெல்வதற்கே தோல்வி
மது மயக்கத்தில் இருந்தால்
தோல்வியே நிலைத்துவிடாதா..?

எழுவதற்கே வீழ்ச்சி
நடைபாதையிலே விழுந்து எழுந்து
வீழ்ச்சியே விருப்பமென்றாயே..?

மது உறக்கத்தினை உதறி…

மயக்கத் தோல்விதனைத் துரத்தி…

விழும் வீழ்ச்சிதனை விரட்டி…

விழித்தெழுந்து எழுச்சி கொள் தமிழா…!
விழித்தெழுந்து எழுச்சி கொள் தமிழா…!

உன் வாக்கால் வென்றது பல கட்சி
ஆனால்…
உனது வீட்டிலோ துடித்து
அழுகிறாளே தமிழச்சி!

மதுவிலக்கு மது-விலக்கு
உன் வீட்டில் இருப்பாள்
அழகாய் உன் குலவிளக்கு!

_தமிழ்நேசன் த. நாகராஜ்

நாள் : 1-Sep-15, 10:10 am

மேலே