தமிழ்நேசன் த நாகராஜ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/guiev_33769.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ்நேசன் த நாகராஜ் |
இடம் | : தமிழ் நாடு |
பிறந்த தேதி | : 05-Oct-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 0 |
த.நாகராஜ் எனது பெயர் தமிழ் மீது உள்ள நேசம்
காரணமாக தமிழ்நேசன் த.நாகராஜ் என்று வைத்துக்கொண்டேன்
சென்னை தமிழ்நாட்டில் வசிக்கிறேன்.....
வள்ளுவன்,பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன்,அப்துல்கலாம்,
போன்றவர்களின் புத்தகங்கள் கவிதைகள் சிறுகதைகள்
கட்டுரைகளில் நாட்டம் அதிகம் குறிப்பாக தமிழ் மொழி
வரலாறு பற்றிய தகவல்களை சேகரித்து வாழ்க தமிழ் என்னும் செயலியை (Android mobile app) வடிவமைத்து வெளியிட்டுள்ளேன்
இதோடு கூட
வாழ்க தமிழ் மீட்சி என்ற அமைப்பை நிறுவி
அதன் தலைவராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுகிறேன்......
நான் சென்னையில் சொந்தமாக மகிழுந்து மற்றும்
சுமையுந்து விற்பனையகம் வைத்துள்ளேன்......
எனது கிறுக்கல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பாராட்டலாம் பிடிக்காவிட்டால் வசையும் பாடலாம் ஏன் எனில் உளியின் வலியை உணர்ந்தால் தான் அழகிய சிலையாக முடியும் எனது எண்ணச்சிலையை அழகாய் வடிக்க ஊக்கமாக உங்கள் அறிவுரையும் நட்பும் அமைந்தால் எனக்கு பெரும் மனமகிழ்வு நல்கும்
மேலும் எனது கிறுக்கல்களை காண வருகை தாருங்கள்
எனது வலைப்பூ : tamilnesannagaraj.blogspot.in
நன்றி....
என்றும் நட்புடன்
-தமிழ்நேசன் த.நாகராஜ்"
மரு – மகள்!
திரு – மழலையாகப் பிறந்து
திரு – செல்வியாக வளர்ந்து
திரு – மதியாக வீடு புகுந்த
குல – மகள் என் தாய் கண்ட
மரு – மகள்!
- தமிழ்நேசன் த.நாகராஜ்
"சுதந்திர
கொடி பிடித்த
தமிழ் சிறுவனின் மனதுக்குள்...!!!
அன்று பார் புகழ வாழ்ந்த
இனம்
இன்று வஞ்சகத்தால் சூழ்ந்த இனம்.!
அன்று பார் ஆண்ட மன்னன்
இனம்
போன இனம்.!
பல சொந்த உயிர்கள் தந்த
இனம்.!
இந்திய
நாட்டுக்குள் வாழ்ந்தாலும்
சிறு மாநிலத்தில் சுருங்கிய இனம்.!
அணுஉலையேனும்
ராட்சசனை
சிறு சலனத்தோடு ஏற்ற இனம்
ஆழ்துளையிடும்
மீத்தேனை பற்றி
அறியாமல்
அனுமதித்த இனம்
ஒரு பசுவை கொன்றால் கூட
பதறியேழும் நாட்டில்
20 உயிர்களை சுட்டுக்கொன்ற வஞ்சகத்தை
வாய்மூடி பார்த்த இனம்.!
தவித்த
வாய்க்கு தண்ணீர் இல்லை
நமக்கு
முல்லைப் பெரியாறில் பங்கும் இல்லை.!
எம் மாநிலத்தில்
ஆங்காங்கே வெளிச்சம் இல்லை.!
தயாரித்த
எங்களுக்கே போதிய மீன்சாரம் இல்லை.!
தமிழகத்தில்
காவேரி நதியின் ஓட்டம் இல்லை.!
அதை கேட்க இந்தியாவிற்க்கு தமிழன்
மேல் நாட்டம் இல்லை.!
கடல் கடந்து தமிழ் இனம்
அழிந்த போது
அதை நிறுத்தவோ தடுக்கவோ முயலவில்லை.!
கடல் நடுவே சுடப்பட்டு உயிர்
இழக்கும்
நமது தமிழ் மீனவரை காக்கவும்
முன்வரவில்லை.!
நம்முடைய
கச்சதீவை எவர் வசமோ தந்து
விட்டு
அதை காக்க நீர்முழ்கி கப்பல்களை
தந்த தேசம்.!
சொந்த நாட்டு தமிழ்மக்களை கொன்று
ஒழிக்க
அண்டை நாட்டுக்கு ராணுவத்தை தந்த தேசம்.!
சர்வதேச
மாமன்றத்தின் போர் குற்ற தீர்மானத்தில்
கூட
தமிழர்களுக்கு
ஆதரவு தராமல் மவுனம் காத்த
தேசம்.!
இப்படி
தமிழனை அழித்த இந்த தேசத்தின்
இந்த -சுதந்திர கொடி-யினை நாம்
தீண்டலாமா?
என்று எண்ணுகிறானோ அந்த தமிழ் நாட்டு
சிறுவன்….!!!
வாழ்க தமிழ்
சிறுவன்
மனதை வாசித்தவன்
-தமிழ்நேசன்
த.நாகராஜ்"
மதுவிலக்கு மது - விலக்கு....!!!
தமிழா நீ.....!!! 👉
விழிப்பதற்கே உறக்கம்
மது குடித்துத் குடித்து உறங்கியே கிடக்கிறாயே..?
வெல்வதற்கே தோல்வி
மது மயக்கத்தில் இருந்தால்
தோல்வியே நிலைத்துவிடாதா..?
எழுவதற்கே வீழ்ச்சி
நடைபாதையிலே விழுந்து எழுந்து
வீழ்ச்சியே விருப்பமென்றாயே..?
மது உறக்கத்தினை உதறி…
மயக்கத் தோல்விதனைத் துரத்தி…
விழும் வீழ்ச்சிதனை விரட்டி…
விழித்தெழுந்து எழுச்சி கொள் தமிழா…!
விழித்தெழுந்து எழுச்சி கொள் தமிழா…!
உன் வாக்கால் வென்றது பல கட்சி
ஆனால்…
உனது வீட்டிலோ துடித்து
அழுகிறா (...)
மதுவிலக்கு மது - விலக்கு....!!!
தமிழா நீ.....!!! 👉
விழிப்பதற்கே உறக்கம்
மது குடித்துத் குடித்து உறங்கியே கிடக்கிறாயே..?
வெல்வதற்கே தோல்வி
மது மயக்கத்தில் இருந்தால்
தோல்வியே நிலைத்துவிடாதா..?
எழுவதற்கே வீழ்ச்சி
நடைபாதையிலே விழுந்து எழுந்து
வீழ்ச்சியே விருப்பமென்றாயே..?
மது உறக்கத்தினை உதறி…
மயக்கத் தோல்விதனைத் துரத்தி…
விழும் வீழ்ச்சிதனை விரட்டி…
விழித்தெழுந்து எழுச்சி கொள் தமிழா…!
விழித்தெழுந்து எழுச்சி கொள் தமிழா…!
உன் வாக்கால் வென்றது பல கட்சி
ஆனால்…
உனது வீட்டிலோ துடித்து
அழுகிறா (...)
அம்மா! என்றும் நீ என்னவளே...
பத்து மாதம் சுமந்தவளே
பக்குவமாய் எனை காக்க
பத்தியம் பல இருந்தவளே
உதிரத்தை உணவாக்கி
உன்னுயிராய் எனை காத்தவளே
உலகத்தில் நான் கண்விழிக்க
உன் தூக்கம் மறந்தவளே
பார்த்துப் பார்த்து வளர்த்தவளே
பாரில் நானுயர உழைத்தவளே
பாசம் காட்டி எப்பொழுதும்
பகலிரவாய் எனை அணைத்தவளே
அன்பையும் பண்பையும் எனது அடையாளமாக்கி
ஆற்றலும் போற்றலும் என் நிலையாக்கி
அறிவும் ஒழுக்கமும் தந்தவளே
ஆதிசக்தியாய் துணை நின்றவளே
அன்றுனது முந்தானை வாசம்
என்றும் எனது நற்சிந்தனையாய் பேசும். (...)