எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

" சுதந்திர கொடி பிடித்த தமிழ் சிறுவனின் மனதுக்குள்...

"சுதந்திர
கொடி பிடித்த

தமிழ் சிறுவனின் மனதுக்குள்...!!!

 

ன்று பார் புகழ வாழ்ந்த
இனம்


இன்று வஞ்சகத்தால் சூழ்ந்த இனம்.!


அன்று பார் ஆண்ட மன்னன்
இனம்


 இன்று  நாதியற்று
போன இனம்.!


 எந்த இனமும் தந்திராத

பல சொந்த உயிர்கள் தந்த
இனம்.!

 

இந்திய
நாட்டுக்குள் வாழ்ந்தாலும்

சிறு மாநிலத்தில் சுருங்கிய இனம்.!

 

அணுஉலையேனும்
ராட்சசனை

சிறு சலனத்தோடு ஏற்ற இனம்

 

ஆழ்துளையிடும்
மீத்தேனை பற்றி

அறியாமல்
அனுமதித்த இனம்

 

ஒரு பசுவை கொன்றால் கூட
பதறியேழும் நாட்டில் 

20  உயிர்களை சுட்டுக்கொன்ற வஞ்சகத்தை

 வாய்மூடி பார்த்த  இனம்.!

 

தவித்த
வாய்க்கு தண்ணீர் இல்லை

நமக்கு
முல்லைப் பெரியாறில் பங்கும் இல்லை.!

 

எம் மாநிலத்தில்
ஆங்காங்கே வெளிச்சம் இல்லை.!

தயாரித்த
எங்களுக்கே போதிய மீன்சாரம் இல்லை.!

 

தமிழகத்தில்
காவேரி நதியின் ஓட்டம் இல்லை.!

அதை கேட்க இந்தியாவிற்க்கு தமிழன்
மேல் நாட்டம் இல்லை.!

 

கடல் கடந்து தமிழ் இனம்
அழிந்த போது

அதை நிறுத்தவோ தடுக்கவோ முயலவில்லை.!

 

கடல் நடுவே சுடப்பட்டு உயிர்
இழக்கும்

நமது தமிழ் மீனவரை காக்கவும்
முன்வரவில்லை.!

 

நம்முடைய
கச்சதீவை எவர் வசமோ தந்து
விட்டு

அதை காக்க நீர்முழ்கி கப்பல்களை
தந்த தேசம்.!

 

சொந்த நாட்டு தமிழ்மக்களை கொன்று
ஒழிக்க

அண்டை நாட்டுக்கு ராணுவத்தை தந்த தேசம்.!

 

சர்வதேச
மாமன்றத்தின் போர் குற்ற தீர்மானத்தில்
கூட

தமிழர்களுக்கு
ஆதரவு தராமல் மவுனம் காத்த
தேசம்.!

 

 

இப்படி
தமிழனை அழித்த இந்த தேசத்தின்

இந்த -சுதந்திர கொடி-யினை நாம்
தீண்டலாமா?

என்று எண்ணுகிறானோ அந்த தமிழ் நாட்டு
சிறுவன்….!!!

 

வாழ்க தமிழ்

 

சிறுவன்
மனதை வாசித்தவன்

-தமிழ்நேசன்
.நாகராஜ்"

நாள் : 3-Sep-15, 6:25 pm

மேலே