எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனது அருமை மனைவி...!!! அன்பின் ஆழம் நீ.... ஆவலின்...

எனது அருமை மனைவி...!!!

அன்பின் ஆழம் நீ....

ஆவலின் ஆதிக்கம் நீ.....

இதயத்தின் இயல் இசை நீ....

ஈடில்லா இயக்குநர் நீ.....

உண்மையில் வியப்பு நீ....

ஊடலின் வார்ப்பு நீ.....

எரிகின்ற தீபம்  நீ.....

ஏற்றிவிடும் ஏணி நீ.....

ஐயத்திற்கு இடம் தரா(த) பெண்மை நீ....

ஒப்பனைகள் எதுவும் இல்லா அசல் நீ....

ஓசையில் ஒளிந்திருக்கும் ஓவியம் நீ.....

ஒளடதத்தின் சுய நிர்ணயம் நீ....

அஃகறையில் ஆணிற்கு இன்னுமொரு  அன்னை நீ....

எனது அருமை மனைவி...!!!


-தமிழ்நேசன் த.நாகராஜ்"

நாள் : 3-Sep-15, 7:32 pm

மேலே