எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படமாகிறது அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, கலாமாக நடிக்கிறார்...

படமாகிறது அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, கலாமாக நடிக்கிறார் அபிதாப் பச்சன்!

மும்பை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. கலாம் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூலை 27 ம் தேதியன்று மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்கள் மத்தியில் பேசும்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

நாடே துக்கத்தில் மூழ்கிய அந்த நிகழ்வில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை, அவரின் பெயரில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏராளமான மக்கள் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர வேண்டும் என்ற உத்வேகம் பெற்று உள்ளனர்.

குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இந்த எண்ணம் அதிகமாக உள்ளது நிலைமை இவ்வாறு இருக்க, தற்போது கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முன்வந்திருக்கிறார் இயக்குனர் நிலா மதாப் பாண்டா. ஒடிசாவைச் சேர்ந்த இந்த இயக்குநர் ஏற்கனவே ஐ ஆம் கலாம் (நான்தான் கலாம்) என்ற பெயரில், 2011 ம் ஆண்டு சிறுவன் ஒருவனின் கனவுகளை மையமாகக்கொண்டு இந்தப் படத்தை எடுத்தார். ஒரு தேசிய விருது உட்பட மொத்தம் 11 விருதுகளை வென்றது இந்தப் படம், தற்போது கலாம் அவர்களின் மறைவையொட்டி அப்துல்கலாம் அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றையும் பிரதிபலிக்கும் விதமாக ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார் பாண்டா.

பாண்டா இயக்கும் இந்தப் படத்தில் கலாமாக நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவிருக்கிறார், இயக்குநர் பாண்டா இந்த படத்தைப் பற்றிக் கூறும்போது " தற்போது கலாம் அவர்கள் நம்முடன் இல்லை. அவரின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் முக்கியமான ஒரு செயல், நான் எனது படத்தின் வேலைகளைத் தொடங்கி விட்டேன்.

கலாம் அவர்கள் நமது அனைவரின் மனதிலும் என்றும் உயிர்ப்புடன் இருப்பார்" என்று கூறியிருக்கிறார். தற்போது அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பாண்டா அப்துல்கலாம் வேடத்தில் அமிதாப் பச்சன் பொருத்தமாக இருப்பார், என்று படத்தின் நாயகனைப் பற்றிய கேள்விக்கும் விடையளித்திருக்கிறார்.

நல்ல முயற்சி படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்....

நாள் : 3-Sep-15, 9:13 am

மேலே