எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

12 அழ்வார்கள் - பன்னிரு ஆழ்வார்களின் புகைப்படங்கள் (...

12 அழ்வார்கள் - பன்னிரு ஆழ்வார்களின் புகைப்படங்கள் ( Images of 12 Alwars)


1) பொய்கை ஆழ்வார்
 பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார், இவர் ஐப்பசி மாதம் 1ஆம் தேதி திருவோண நட்சததிரத்தில், காஞ்சீபுரத்தில் பிறந்தார்.
மஹாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான திருச் சங்கின் அம்சமாக இவர் கருதப்படுகிறார்.

2) பூதத்தாழ்வார்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில பிறந்தவர். வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர
திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார்.

3) பேயாழ்வார
மயிலாப்பூரில், கி.பி.7ம் நூற்றாண்டில் பிறந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர்.

4) திருமழிசை ஆழ்வார
தை மாதம் மக நட்சத்திரத்தில், திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார்.

5) நம்மாழ்வார்
கி.பி.9ம் நூற்றாண்டில் திருநெல்வேலிக்கருகில் உள்ள திருக்குருகூர் என்ற ஊரில் பிறந்தவர். திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி, எனும் நான்கு பெரும் தமிழ்  தமிழ் மறையை எழுதியவர்.

6) திருமங்கையாழ்வார
 பாண்டிய நாட்டில் ஆழ்வார்திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் பிறந்தவர். இவர் தன் ஆசாரியனான நம்மாழ்வாராய் எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.

7) தொண்டரடிப் பொடி ஆழ்வார
 சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் மார்ஹலி மாதம் பிறந்தவர். பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் இவர் திருவரங்கனைத் தம் பாசுரங்களால் பாடித் துதித்து மற்ற திவ்ய தேசக் கோயில்களுக்கும் விஜயம் செய்தார்.

8) பெரியாழ்வார
ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரை திருப்பல்லாண்டு (12 பாசுரங்கள்), 13 தொடக்கம் 473 வரை பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) ஆகிய இரு நூல்களை எழுதயுள்ளார்.

9) ஸ்ரீ ஆண்டாள்
12 பெரும் ஆழ்வார்களில், இவர் ஒருவரே பெண்ணாவார். கி.பி.9ம் நூற்றாண்டில் தென்பாண்டி நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்தவர். திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.

10) குலசேகர ஆழ்வார்
கி.பி. 8ம் நூற்றாண்டில், சேர நாட்டைச் சேர்ந்த திருவஞ்சிக் கோலம் என்னும் ஊரில் பிறந்தவர். பெருமாள் திருமொழி என்ற பெயரில் 105 பாசுரங்கள் இயற்றியுள்ளார்.

11) மதுரகவி ஆழ்வார்
கி.பி. 9ம் நூற்றாண்டில் திருக்கோவூர் என்ற தலத்தில் பிறந்தவர். "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற நூலை நம்மாழ்வாருடைய தத்துவங்களை கேட்டறிந்து பாடினார். பின்பு நம்மாழ்வாரையே தம் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.

12) திருப்பாணாழ்வார
கி.பி.8ம் நூற்றாண்டில் சோழவள நாட்டில் உள்ள உரையூரில் அவதரித்தார். எம்பெருமானை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து அவரது திருவடி தொடங்கி திருமுடி வரை வர்ணிக்கும் 10 பாசுரங்களைப் பாடினார்.


பதிவு : Abitha
நாள் : 11-Sep-15, 4:56 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே