எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து ... எழுத்து ... எழுத்தாய் ... (பகுதி...

எழுத்து... எழுத்து... எழுத்தாய்... (பகுதி - 2)



தள எழுத்து 
 


விரிகடலாய் நிற்கும் 
கவிதை கதையாறுகள் கலக்கும் 
கலகலப்பு பல சமயம் 
கைகலப்பு சில சமயம்... 

எண் திசை செய்திகள் யாவும் 
கொண்டு வந்தே குவிப்பார்  
எல்லோரும் அறியும் வண்ணம் 
எழுத்தினிலே  பதித்துடுவார்

வாழ்த்துரைகள்  வந்தும் சொல்வர் 
வசை பாட்டும் பாடி வைப்பார் 
கணினிக்குள் உலவும் சமூகம் 
களிப்புமுண்டு...கண்ணீருமுண்டு  .....

கருத்துக்கள் ஆர்ப்பரிக்கும் 
நட்புறவும் கைகோர்க்கும் 
கவி மறந்து போனாலோ 
எழுதியதை கவிதையாக்கும்.. 

காற்றாட நினைக்கும் கவிக்கு 
வந்துய்யும் தமிழ்ப் பூங்கா... 
கவித் தென்றல் சாமரம் வீசும்.. 
நற்கவிகூட்டம் மதியும் மயங்கும்... 


தலை எழுத்து 


கடவுள் எழுதியது 
உரைத்திடுவார் மனிதருமே 
இதனை இதுவரையில் 
படித்ததில்லை யாவருமே... 

இதனை விதிஎன்பார் 
மதியினால் வெல்லலாம் என்பர் 
மதியினில் வெல்வதுவும் 
விதிவழி ஆவதறியார்... 

ஜாதகத்தில் உள்ளதென்பார் 
கைரேகையிலும் தெரியுமென்பார் 
படித்தறியத் துடித்திடுவார் 
பணம் செலவழித்தும்  அறியார்.. 

மூடு மந்திர எழுத்து 
மூடி வைத்த எழுத்து.. 
வலிமை வாய்ந்த எழுத்து 
வார்த்தைகளில் அடங்கிடுமா???..
        
 


பதிவு : C. SHANTHI
நாள் : 12-Sep-15, 6:05 pm

மேலே