ஒரு வீரனின் கடைசி குறிப்பு ...... (இது முகநூல்...
ஒரு வீரனின் கடைசி குறிப்பு ......
(இது முகநூல் நண்பர் திரு.பொன் ஞான மூர்த்தி Pon Gnana Moorthyஅவர்களின் ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம் .. )
என்னுயிர் போர்க்களத்தில்
எதிரிகள் கொய்கையில் :
என்னுடலைப் பதப்படுத்தி
என்னூருக்கு அனுப்புகையில் :
விருதுகளை துடிக்கா
என்மார்பின் மீது சொருகுங்கள்.
நானன்றே(நான் நன்றே ) செய்தேனென்று
என்னம்மாவுக்குச் சொல்லுங்கள் :
தந்தைக்குச் சொல்லுங்கள் :
தலைகுனிய வேண்டாமென்று.
தலை சாய்வதற்கு முன் எதிரிகளின்
நிலை குலைத்தானென்று :
என்சகோதரனுக்குச் சொல்லுங்கள் :
நல்லா படிக்கச் சொல்லி
என்னிரு சக்கர வாகன சாவி கொடுங்கள்:
அவனையே ஓட்டச் சொல்லி :
சகோதரிக்குச் சொல்லுங்கள்
என்றும் கலங்க வேண்டாம்
இன்றைய மாலை சூரிய மறைவுக்குப்பின்
இவனெழுந்துவர மாட்டான்:
என் நட்புகளுக்குச் சொல்லுங்கள்
யாரும் அழவேண்டாம்:
ஏனென்றால் நான் வீரன்-சாதிக்க பிறந்து
சாதித்து இறந்தேன்: கண்ணீர் வேண்டாம் .
சுசீந்திரன்.