எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிறந்தநாள் காணும் பிரம்மச்சாரியே.. அரசமரமும், வேப்பமரமும் உனது அரண்மனை........

பிறந்தநாள் காணும் பிரம்மச்சாரியே..

அரசமரமும்,
வேப்பமரமும் உனது அரண்மனை.....

உனது மாலையோ
எவரும்
கண்டுகொள்ளாத எருக்கம்
மலர்கள்.....

உனது இனத்தவரை
பிரமாண்டமான கோவில்கள் 
கட்டி அமர 
வைத்துவிட்டு, 
நீ மரத்தடியில் அவர்களுக்கு காவல்காரனாக.....

ஆடம்பரம் விரும்பாத உனக்கு 
பட்டாலும் 
பணத்தாலும் அலங்காரம்....
உலகளாவிய 
ஊர்வலம்....

வருடந்தோறும் 
உயர்கிறது இவர்களது 
கேளிக்கை..... 

இப்படி வேடிக்கை பார்ப்பது உனது வாடிக்கை......

நீ மரத்தடியில் மௌனமாய்!!!...

நாள் : 17-Sep-15, 1:30 pm

மேலே